Thursday, March 16, 2017

(பெரியவா என்று வாய்விட்டு அழுதேன். இந்த பதிவை படித்தவுடன். நாமெல்லாம் கால்தூசுக்கு கூட பிரயோஜனமில்லை.)நீ நூறு வயசு இருப்பே, நாலு நக்ஷத்ரம் கொறையும். - மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை ...

முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ் ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரி ல எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது.

வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார்.

அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா.

இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் .

பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. 

கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. இப்படியே பண்ணிண்டு இருக்கா.

சதஸ் முடிஞ்சது. அவாளை கூப்டு அப்டின்னா.
அந்த அம்மா வந்தா.

பெரியவா அவ கிட்டே சொன்னா.

நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.
நிறைய சந்தோஷங்களை தெரிவித்த பின் மேலும் தொடர்ந்தார் பிரபு.

ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு.

நான் எப்பேர்ப்பட்டவன்?

இவர் இப்படி கேட்டவுடன் அந்த அம்மா சொன்னாள்.

ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.
ஹாங் ஹாங் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா.

இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு என்றார்.

அந்த அம்மா சொன்னார்.
நீ நூறு வயசு இருப்பே, போ என்றாள் அவள், ஆசிர்வாதம் செய்வது போல.

தொடர்ந்தாள் அவள்,
நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.

இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும். பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா.

இதை முக்கூர் டைரில எழுதி இருக்கார்.
ஆச்சிரியம். நடந்தது என்ன?

1994 ஜனவரி 8 சித்தி ஆனா, பெரியவா. மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.

அந்த பதிவிரதை சொன்னது என்ன?

நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே - நாலு அனுஷம் நக்ஷத்ரம் கொறஞ்சுது.

ஜனவரி 8, அனுஷம், அன்னியோட அவதார பூர்த்தி.
அப்புறம் தான் தோணித்து.

இன்னும் ஒரு நாலு மாசம் இருந்திருக்கக் கூடாதா, நூறு வயசு பூர்த்தி. செஞ்சுரி போட்டிருக்கலாமே?
பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?
பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!

ஆச்சிரியம். பெரியவா சரித்ரம் தோண்டத் தோண்ட இப்படி பல விஷயங்கள்..

.
நன்றி - ஸ்ரீ கணேச சர்மா, 
'தெய்வத்தின் குரல்' உபன்யாசத்தில்.Wednesday, March 8, 2017


பெரியவா சரணம் !!

""பெரியவா நெனச்சேள்! பழம் வந்துது!..." 

ஒரு ஐப்பஸி மாஸத்தில், ஸ்ரீமடத்தில் பெரியவா பக்தர்களுடன் ஏதோ பேசிக்கொண்டும், விஜாரித்துக் கொண்டும் தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தார். பெரியவாளுக்கு முன் மூங்கில் தட்டுகளிலும், தாம்பாளங்களிலும் அநேகவிதமான பழங்கள் கொட்டிக் கிடந்தன.

அந்தக் கூட்டத்தில், ஒரு மூன்று வயஸுப் பெண்குழந்தை ஸந்தோஷமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. பெண் குழந்தைகளுக்கு எத்தனைதான் விதவிதமாக குட்டையான கவுன், ஸ்கர்ட் என்று போட்டாலும், தழைய தழைய பாவாடை கட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம், ஏனோ ஒருவித தெய்வீகக்களை, தானாகவே வந்துவிடும். அன்று அந்தக் குழந்தையும், பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருந்தது. 

பெரியவா அந்தக் குழந்தையை அருகில் அழைத்தார். பெரியவாளிடம் ஓடியது.... 

"என்ன உம்மாச்சி தாத்தா?..." 

மழலையில் கேட்டது. 

தன் முன்னால் இருந்த தட்டுக்களை அதனிடம் காட்டி, அதுக்கு choice வேற குடுத்தார்....

"இந்தா....இதுலேந்து ஒனக்கு என்ன பழம் வேணுமோ, அதை நீயே, ஒன்னோட குஞ்சுக்கையால எடுத்துக்கோ" 

அந்தக் குட்டிக்கு படு குஷியாகி விட்டது! 

ஒவ்வொரு தட்டாக inspect பண்ண ஆரம்பித்தது..... 

அன்னாஸி, ஆப்பிள், ஆரஞ்சு, த்ராக்ஷை, வாழைப்பழம் எல்லாம் கொட்டிக் கிடந்தது. 

குழந்தை இல்லையா? குழந்தை மாதிரிதானே கேட்கும்? 

இதுவும் கேட்டது.........

அங்கே இல்லாத ஒரு பழத்தை!

"உம்மாச்சி தாத்தா...! எனக்கு மாம்பழம் வேணும்... காணுமே!..."

மாம்பழம் எங்கிருந்து வரும்? மாவடு ஸீஸன் கூட ஆரம்பிக்கவில்லை! 

"மாம்பழம் அதுல இல்லியா?...." 

கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார். பிறகு வேதபுரி மாமாவைக் கூப்பிட்டார்....

"வேதபுரி! உள்ள போய், மேட்டூர் ஸ்வாமிகிட்ட எதாவுது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா பாரு!...." 

வேதபுரி மாமா சென்றதும், கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

ஸரியாக அந்த ஸமயத்தில், கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஆந்த்ராவிலிருந்து ரெண்டு பேர், ஆளுக்கொரு பழத்தட்டுடன் வந்தார்கள். 

பெரியவா முன் பழத்தட்டை கீழே வைத்துவிட்டு, நமஸ்காரம் பண்ணினார்கள். 

குழந்தை அவர்கள் வைத்த தட்டைப் பார்த்தது. 

"உம்மாச்சி தாத்தா..! மாம்பழம்!..."

அழகாக குண்டு குண்டு மாம்பழங்கள் மேலாக இருந்தது. பெரியவா கண்களைத் திறந்தார். 

அந்தக் குழந்தையிடம் மாம்பழத்தைக் காட்டி, "எடுத்துக்கோ!..." என்றதும், அழகாக ஒரே ஒரு மாம்பழத்தை இரண்டு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கி எடுத்துக் கொண்டது. 

முகமெல்லாம் ஒரே ஸந்தோஷம்!

வேதபுரி மாமா திரும்பி வந்து பெரியவாளிடம் " அங்க ஒண்ணுமே இல்ல...." என்று சொல்லிவிட்டு குழந்தையின் பக்கம் திரும்பியவர், அதன் கைகளில் உள்ள குண்டு மாம்பழத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனார்!

"ஏண்டா ! மாம்பழம் எப்டி வந்துது?..." 

தெரியாதவர் போல் பெரியவா அதிஸயமாகக் கேட்டதும், தெரிந்தே, மிக அழகான பதிலை வேதபுரி மாமா கண்களில் கண்ணீரோடு சொன்னார்.......

"பெரியவா நெனச்சேள்! பழம் வந்துது!..." 

மாம்பழம் கொண்டு வந்த ஆந்த்ராக்காரர்கள் அதன்பின் அங்கே காணப்படவில்லை!

ஒண்ணுமே தெரியாத சின்னக் குழந்தை மாம்பழம் கேட்பது, அழகாக இருக்கும்.ஆனால் எல்லாம் தெரிந்த பெரிய குழந்தைகளான நாமும், மாம்பழத்தைத்தான் கேட்போம்! அதில் தவறேதும் இல்லை! 

அதன் அர்த்தம் அறிந்து இப்படிக் கேட்போமே!

[மா+பழம்] மாமஹாப் பழமான பெரியவாளிடம், 'மாம்பழ'மான பெரியவாளையே கேட்போம்! 

அல்லது....

[மாம்-என்னை, பழம்-பழமை ] "பழமையான, அனாதியான, என்னையே எனக்கு குடு" என்று கேட்டுக் கொண்டே இருப்போம்! 

தராமலா போவார்? கட்டாயம் தருவார்.


பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்


Thursday, March 2, 2017

ஸதாபிஷேகம் பண்ணிக்கோ!


ஓருநாள் பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு வயஸான தம்பதி வந்தார்கள்.
"பெரியவாட்ட ஒரு ப்ரார்த்தனை....."
"சொல்லு....."
"எனக்கு 81 வயஸ் ஆறது. கொழந்தேள்ளாம் ஸதாபிஷேகம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தறா....."
"பண்ணிக்க வேண்டியதுதானே!.."
"இல்ல... பெரியவா! எங்களுக்கு அதுல இஷ்டமில்ல... மனஸு ஒப்பல!!"
"ஏன்?.."
"ஸதாபிஷேக பத்ரிகைல "ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் [ஆயிரம் பிறை கண்டவர்]ன்னு போடறோம். ஆனா, நெஜத்ல நா... அப்டி ஒண்ணும் பாத்ததில்ல...! ஒவ்வொரு பக்ஷமும் மூணாம் பிறையை தர்ஶனம் பண்ற வழக்கமில்ல! அப்டி செய்யாதப்போ, நா.. எப்டி ஆயிரம் பிறை கண்டவன்னு போட்டுக்கறது? அது பொய் இல்லியா? அதான் வேண்டாம்னு தோணித்து பெரியவா!"
எளிமைக்கெல்லாம் எளிமையான பெரியவா அழகாக சிரித்துக் கொண்டே, மிக மிக எளிமையான ஒரு உபாயம் சொன்னார்....
"நீயும், ஆயிரம் சந்த்ரனை பாக்காம, பத்ரிகைல தர்ஶனம் பண்ணினேன்...ன்னு போட்டுக்க வேணாம். ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் பண்ணிட்டே, கொழந்தேள் ஆசைப்படி ஸதாபிஷேகம் பண்ணிக்கலாம்"
தம்பதி குழம்பினார்கள்.
ஆயிரம் பிறைகள்.... இனிமேலா? எப்படி?
"நேர இங்கேர்ந்து ஏகாம்பரேஶ்வரர் கோவிலுக்கு போங்கோ! அங்க, ப்ராஹாரத்த ப்ரதக்ஷிணமா வரச்சே, ஸஹஸ்ரலிங்கத்தை தர்ஶனம் பண்ணிட்டு வாங்கோ!.."
இருவரும் ஏகாம்ரேஶ்வரர் கோவிலுக்குப் போய், பெரியவா சொன்னபடி ஸஹஸ்ரலிங்கத்தை தர்ஶனம் செய்துவிட்டு மீண்டும் பெரியவாளிடம் வந்தார்கள்.
"என்ன? ஸஹஸ்ரலிங்கம் தர்ஶனமாச்சா?..."
"பெரியவா அனுக்ரஹத்தால ஆச்சு.."
"ஸெரி.... இப்போவாவது ஸதாபிஷேகம் பண்ணிக்கலாமா?.."
"ஸஹஸ்ரலிங்கத்துக்கும் ஸதாபிஷேகத்துக்கும் என்ன ஸம்பந்தம்?...."
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை!


"என்ன முழிக்கற? நீ கோவில்ல ஸஹஸ்ரலிங்கத்தை தர்ஶனம் பண்ணினேல்லியோ? அதுல... மொத்தம் ஆயிரம் லிங்கம் இருக்கும். ஒரொரு லிங்கத்தோட தலைலேயும் சந்த்ரன் இருக்கோன்னோ? அதான்.... ஒனக்கு ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் ஆய்டுத்து! இனிமே... கொழந்தேள் ஆசைப்படி, ஸதாபிஷேகமும் பண்ணிக்கலாம்..."
அந்த தம்பதிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. பெரியவாளுடைய இந்த simple logic [but true] அவர்கள் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த வருத்தத்தை, தவிடுபொடியாக்கியதை நினைத்தும், பெரியவாளுடைய கருணையை நினைத்தும் கண்களில் மாலை மாலையாய் வழிந்த கண்ணீரால், மானஸீகமாக பெரியவா பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார்கள்.
"க்ஷேமமா இருங்கோ"
அபயகரம் தூக்கி ஆஸிர்வதித்து ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.
நாமும் எல்லா ஶிவன் கோவிலிலும் உள்ள ஸஹஸ்ரலிங்கத்தை பல ஸமயங்களில் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம். அல்லது போகிற போக்கில் ஒரு கும்பிடு போடுவோம். ஆனால் மிகவும் அறிவு சார்ந்த நம் முன்னோர்கள் ஸஹஸ்ரலிங்கத்தை ஆவாஹனம் பண்ணியிருப்பதன் தாத்பர்யம் இதுதான் என்பது பெரியவா சொல்லித்தான் தெரிந்து கொள்ள முடியும்.
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்Thursday, February 23, 2017

 திருச்சியில் ஒரு பக்தர்புகைப்படக்காரர்சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார்வீட்டு பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.
தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகுஏதாவது ஒரு படையலைமகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார்.  பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு தடவை பெரியவாஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார்அதுவோ உஷ்ணப் பிரதேசம்வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருந்தது.
திருச்சியில் இருந்த இந்த புகைப்படக் கலைஞருக்குபெரியவாளைத் தரிசிக்க வேண்டும்’  என்று மனதில் ஆசை வந்ததுஅன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் படையலாக சூடான பாலை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.கர்நூலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம்எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம்நமது புகைப்பட நிபுணர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லைசற்றுத்  தூரத்தில் இருந்த மணற்குவியல்  ஒன்றின்மீது ஏறி நின்று மகா பெரியவாளைத் தரிசிக்க முயன்றார்வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டதுகும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார்இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.
சற்றுத்  தூரம்தான் நடந்திருப்பார்யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார்.
ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார்.  “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க ?”
ஆமாம்
பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”
என்னையா ?”  — பக்தருக்கு வியப்பு.
நீங்க ஃபோட்டோகிராபர் தானே ?”
ஆமாம்
அப்படியென்றால் வாருங்கள்….”
விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார்அந்தச் சிஷ்யர்கைகளைக் கூப்பியவாறுகண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடபுகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.
அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான்,  “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே…  கடைசியில் பார்க்காமலே போனால் என்னப்பா அர்த்தம் ?”  என்றார்.
கும்பல் நிறைய இருந்ததுஅதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு….”  என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் புகைப்படக்காரர்.
சரிசரி.. சாப்பிட்டியோ ? “
சாப்பிட்டேன் !”
சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார்.  “என் வாயைப் பார்த்தியோ ?”
நாக்கை வெளியே நீட்டுகிறார்சூடுபட்டது போல் சிவந்திருக்கிறதுபிறகு கேட்டார்.  “உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது..  ஏன் தெரியுமா ?”
புகைப்பட நிபுணருக்குப்  புரியவில்லை.
நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா…  அதான்! ”  என்றார்.
திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் வைத்த படையல் அப்போது தான் நினைவுக்கு வந்தது.
சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபுஎன்னை மன்னியுங்கள் ”  என்று கதறினார்.எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால்,  காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள்அது சாத்வீகமான பக்தி !  “ஆண்டவனேநீதான் எனக்கு எல்லாம்!”  என்று மனதார நினைக்கும் பக்தி !!