Monday, April 20, 2015

பிரப்பன் வலசை - பகுதி 2

அடுத்து நாங்கள் சென்றது பாம்பனில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.   அங்கு எடுத்த புகைப்படங்கள் இதோ

இடது புறம் தும்பிக்கையான், நடுவில் அழகான குட்டி பாலசுப்பிரமணியர்.  முருகன் என்றாலே அழகு.  அதிலும் இந்த குட்டி முருகன் அழகோ அழகு.





ஸ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு இரு முனிவர்களுடன் வந்து பால முருகன் ஆட்கொண்ட காட்சி புகைப்படமாக






 விநாயகப் பெருமானும், முருகன், வள்ளி, தெய்வானையுடன் அழகான அலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள். 










எங்கள் அதிர்ஷ்டம் பைரவி அன்று இந்த கால பைரவரை தரிசிக்கும் பேறு பெற்றோம்.














ஸ்ரீ அகத்திய முனிவர், ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்



முருகன் சந்நிதிக்கு மேல் உள்ள சிற்பம்




மயில் வாகனம்



 அழகான விநாயகர் 



கோவிலில் இருந்து கடலின் தோற்றம்








Tuesday, April 14, 2015

பிரப்பன் வலசை - பகுதி 1

பொதுவா ராமேஸ்வரம் செல்பவர்கள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்று விட்டு திரும்பி விடுவார்கள்.   மூன்றாவது முறையாக ராமேஸ்வரம் சென்ற நான் இதுவரை பார்க்காத இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று வலை உலகில் தேடி ஸ்ரீபாம்பன் சுவாமிகள் வாழ்ந்த இடம், சுவாமிகளுக்கு முருகப் பெருமான் அருள் பாலித்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரப்பன் வலசை கிராமம். 


நாங்கள் முதலில் சென்றது சுவாமிகளுக்கு முருகப் பெருமான் அருள் பாலித்த இடம்



 **********

  
முருகன் மீது தீவிர பக்தி கொண்டவரான

சுவாமிகள் தான் வழிபடும் உருவங்களில் 

எல்லாம் முருகனையே காணவேண்டும் என 

எண்ணம் கொண்டவர்.



முருகப்பெருமான் தனக்கு காட்சி 

கொடுக்கவேண்டி முருகனிடம் 

உபதேசம்பெறவேண்டி மயானமாக இருந்த இந்த

இடத்தில் கடும் தவம் மேற்கொண்டார்

தவத்திற்கு கடும் இடையூறுகள் வந்தன. 


முருகனின் அருளால் அனைத்தையும் 

உடைத்தெறிந்தார்.


ஏழாம் நாள் இரவு இரண்டு முனிவர்களுடன் 

அடியார் உருவத்தில் முருகன் வந்தார்

சுவாமிகளிடம் ஒரு வார்த்தையை 

உபதேசித்துவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்த

சொல்லை உச்சரித்தபடியே மீண்டும் தவத்தில் 

ஆழ்ந்தார். முப்பத்தைந்தாம் நாள் அவரை 

தவத்தில் இருந்து எழச்சொல்லி அசரீரி 

கேட்டது. எம்பெருமான் முருகன் சொன்ன 

பிறகே எழுவேன் என சுவாமிகள் கூறினார்.



இது முருகனின் உத்தரவு என அசரீரி 

கேட்டபிறகே சுவாமிகள் எழுந்தார். முருகன் 

மயில் மீது அமர்ந்த கோலத்தில் இந்த இடத்தில் 

இவருக்கு தரிசனம் கிடைத்தது. முருகன் காட்சி 

கொடுத்த இடமாதலால் இங்கு முருகனுக்கு 

ஆலயம் எழுப்பி வழிபாடு நடந்து வருகிறது.








.
கோவில் வளாகத்தில் இருந்த அழகிய ஆலமரம்




கோவிலை தூய்மையாக்கிக் கொண்டிருக்கும் அன்பர்.


Monday, April 13, 2015

மன்மத ஆண்டே வருக வருக

இந்த தமிழ்ப் புத்தாண்டு எனக்கு ஒரு மிகவும்

சிறப்பான ஆண்டாகும்.

இருக்காதா பின்னே. அறுபது ஆண்டுகளுக்கு

முன் நான் அவதரித்த (!!!) ஆண்டாயிற்றே. ஆக 

இந்த மன்மத ஆண்டு வைகாசி மாதம் 12 ம்

 நாள் பூர நட்சத்திரம் கூடிய சுபயோக 

சுபதினத்தில் (26.05.2015) எனக்கு அகவை 60 

முடிந்து 61 தொடங்கப் போகிறது. இப்ப 

சொல்லுங்க இந்த மன்மத வருடம் எனக்கு 

ரொம்ப சிறப்பானதுதானே.




இந்தப் புத்தாண்டை ஆவலுடனும், ஆர்வத்துடனும், எனது 

புத்தாண்டு கவிதையுடனும், வருக வருக என்று 

வரவேற்கிறேன்.


மீள் பதிவு.




புத்தாண்டு பிறக்குது

புத்தாண்டு பிறக்குது

முத்தான கோரிக்கைகள்

முன்னே வைக்கின்றேன்

முடிந்தால் நிறைவேற்றிடு

முழு முதற் கடவுளே – முடிந்தால்

முழுவதும் நிறைவேற்றிவிடு.




மொழிச்சண்டை,

இனச்சண்டை,

மதச்சண்டை,

ஜாதிச்சண்டை,

அண்டை, அயல் நாட்டுச் சண்டை

எல்லா சண்டைகளையும்

அறவே ஒழித்திடு.



கொலை, களவு, கற்பழிப்பு,

நரபலி, தீண்டாமை,

நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்

நச்சென்று நசுக்கி

நலம் கெட்டுப்போகவை.




நீ கொடுத்த இன்னுயிரை

தானே அழிக்கும்

தரங்கெட்ட செயலை

தப்பாமல் மாற்றிடு.



பிறர் பொருள்,

பிறர் மனை கவரும்

பேராசையை

கட்டாயம் விரட்டி விடு.



பிச்சையில்லா பாரதம்

நிச்சயம் உருவாக்கிடு

உழைப்பின் உயர்வு,

உயிரின் விலை,

பாரம்பரியம்,

நல்ல பழக்க வழக்கங்கள்

புரியாதவர்களுக்குப்

புரிய வைத்திடு.



முட்டாள் மனிதனை

மூளைச் சலவை செய்தாவது

முடிந்தவரை நிறைவேற்றிடு.